அத்தம வேலைத்திட்டம் 2026
அத்தம வேலைத்திட்டதின் அம்பாரை மாவட்ட பிரதான நிகழ்வு இன்று கல்முனை இஸ்லாமாபாத்தில் இடம் பெற்றது.அத்தம வேலைத்திட்டதின் அம்பாரை மாவட்ட பிரதான நிகழ்வு இன்று கல்முனை இஸ்லாமாபாத்தில் இடம் பெற்றது.

கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அத்தம தேசிய தூய்மை தினத்தின் அம்பாரை மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு இன்று (2026.09.19) சனிக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்திற்குற்பட்ட கல்முனை- 01 இஸ்லாமாபாத் கிராமத்தில் இடம்பெற்றது.
 
பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும் அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான வசந்த பியதிஸ்ஸ, அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சி, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் ,கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம்.நெளபீஸ் ,அம்பாரை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்ல உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 
 
அம்பாரை மாவட்ட செயலக அதிகாரிகள் கல்முனை பிரதேச செயலக அதிகாரிகள் கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கல்முனை பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள் சமூக வலுவூட்டல் குழுக்களின் பிரதிநிதிகள் கிராம உத்தியோகத்தர்கள் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் உட்பட சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிரமதானப்பணிகளில் ஈடுபட்டனர்.

இதே வேளை கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேலும் மூன்று நிகழ்வுகள் கல்முனைக்குடி மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களிலும் இன்று இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
5
4
6
7
8
9
10
2
1
14
15
16
17
19
20
21
24
27
26
25
22

 

News & Events

06
ඔක්2026
WORKS

WORKS

INTERNAL AFFAIRS UNIT DIVISIONAL SECRETARIAT KALMUNAI In...

25
සැප්2026

அத்தம வேலைத்திட்டம் 2026

அத்தம வேலைத்திட்டம் 2026

Scroll To Top