எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

குடியுரிமை சாசனம்

News & Events

23
அக்2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 – கல்முனை பிரதேச செயலகத்திற்கு  Commendation விருது!

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 – கல்முனை பிரதேச...

21
அக்2026

2026 சிறுவர் தின நிகழ்வு ! கல்முனை பிரதேச செயலகம்

கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு...

06
அக்2026
WORKS

WORKS

INTERNAL AFFAIRS UNIT DIVISIONAL SECRETARIAT KALMUNAI In...

25
செப்2026

அத்தம வேலைத்திட்டம் 2026

அத்தம வேலைத்திட்டம் 2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 – கல்முனை பிரதேச செயலகத்திற்கு  Commendation விருது!


கல்முனை பிரதேச செயலகம், தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இன் கீழ் சிறப்பு பாராட்டுத் திறமை விருதினை (Commendation Award) முதன் முறையாக பெற்றுள்ளது.


தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இற்கான விருது வழங்கும் விழா ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடத்தில் 2026.10.22ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், தென் மாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாத்தறை மாவட்ட அரசாங்க அதிபர், தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் WMD.சுரங்க குணரத்தின, பணிப்பாளர் JD. நிரஞ்ச S. ஜெயக்கொடி உள்ளிட்ட மேலதிகப் பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள், கணக்காளர் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப  உத்தியோகத்தர் உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


இது நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, நிர்வாக வினைத்திறன், உற்பத்தித்திறன் மேம்பாட்டிற்கான முயற்சிகள் அத்துடன் தரமான பொதுச் சேவையை வழங்குவதில் கொண்டுள்ள ஈடுபாடு ஆகியவற்றைப் பறைசாற்றுகின்றது.


🌟 வெற்றிக்குப் பின்னால் உழைத்த அனைவருக்கும் பாராட்டு!


இவ்விருதினைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்கி, உத்தியோகத்தர்களை வழிப்படுத்தி, நெறிப்படுத்திய பிரதேச செயலாளர் T.M.M.அன்சார் அவர்களுக்கும், இம்முயற்சியில் முன்னின்று உழைத்த கணக்காளர் K. M. S. அமீர் அலி உதவித் திட்டமிடல் பணிப்பாளர் A.L.A. மஜீட் ,நிருவாக உத்தியோகத்தர் M. N. M. ரம்சான், கிளைத்தலைவர்கள், விசேடமாக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சகல அலுவலக மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அனைவரினதும் அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு, பொறுப்புணர்வு மற்றும் குழு முயற்சியின் பயனாகக் கிடைத்துள்ள இவ்வங்கீகாரம், பிரதேச செயலகத்தின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமையும்.


,இச்சாதனைக்குப் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! 💐i

1

3

2

Scroll To Top