கல்முனை  பிரதேச செயலகம் அம்பாரை மாவட்டத்தில் மூன்றாமிடம் .. 

ஜனாதிபதி நிதிய ஊடாக சாதனைப் படைப்பு!

மக்களின் நலனை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் பிரதேச மட்டம் வரை விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தின் கல்முனைபிரதேச செயலகம் திறம்படச் செயல்பட்டு அம்பாறை மாவட்டத்தில்  மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

​கடந்த 2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சேவைகளின் ஊடாக, மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத உதவிகளைப் பொதுமக்களுக்கு விரைவாகப் பெற்றுக்கொடுப்பதில் கல்முனை  பிரதேச செயலகம் முன்னின்று செயற்பட்டுள்ளது.

​இது தொடர்பாக, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாகச் சிறப்பாகச் சேவையாற்றிய பிரதேச செயலகங்களைப் பாராட்டி கௌரவிக்கும் கிழக்கு மாகாணக் கௌரவிப்பு நிகழ்வு, மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) ராஜதுரை கேட்போர் கூடத்தில் இன்று (12.09.2026) நடைபெற்றது. ​இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இவ்விழாவில், அம்பாறை மாவட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற கல்முனை பிரதேச செயலகத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.​இந்நிகழ்வில் கல்முனை  பிரதேச செயலகத்தின் சார்பில்  நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்ஸான் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எல். எப். ஜெஸ்லி ஆகியோர் கலந்துகொண்டு விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

​கல்முனை பிரதேச செயலகம் ஜனாதிபதி நிதியத்தின் கீழ் இதுவரை 20 மருத்துவ உதவிகளையும், 08 மருத்துவம் அல்லாத உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.​

கல்முனை  பிரதேச செயலாளரின் அர்ப்பணிப்பான வழிகாட்டலும், உரிய உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியும் பொதுமக்களின் விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து இம்மாபெரும் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாக அமைந்தன.​இத்தகைய மக்கள் நலப் பணிகள் எதிர்காலத்திலும் தொடரவும், கல்முனை  பிரதேச மக்கள் இதன் பலன்களை முழுமையாகப் பெற்றுக்கொள்ளவும் இந்தச் சாதனை ஒரு மைல்கல்லாக அமைகிறது.

President fund

President fund2

President fund3

President fund1

President fund4

President fund5

News & Events

25
செப்2026

அத்தம வேலைத்திட்டம் 2026

அத்தம வேலைத்திட்டம் 2026

15
செப்2026

கல்முனை  பிரதேச செயலகம் அம்பாரை மாவட்டத்தில் மூன்றாமிடம் ..  ஜனாதிபதி நிதிய ஊடாக சாதனைப் படைப்பு!

கல்முனை  பிரதேச செயலகம் அம்பாரை மாவட்டத்தில் மூன்றாமிடம் ..  ஜனாதிபதி...

குடியுரிமை சாசனம்

Scroll To Top